vennila balachandran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vennila balachandran |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 03-May-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 9 |
பட்டம் வாங்கியாச்சு.. அம்மா அப்பா, வீடு, நண்பர்கள், சொந்த ஊரு எல்லாத்தையும் விட்டுட்டு வெளியூருக்கு வந்து வேலையில சேர்ந்தாச்சு .. இனி எதுக்கு ஓடுறோம்னு தெரியாம சமூகத்தை பத்தி கவலை படாம என் கவிதை ரசனை எல்லாத்தையும் தொலைச்சுட்டு கண்ணை கட்டி விட்டு ஓட விட்ர பந்தயத்துல நானும் ஓட போறேன்..
இனி வீடுகளில்
இரவு ஒன்பது மணிக்குள்
திரும்பிவிடு என
பெண் பிள்ளைகளிடம் அல்ல
ஆண் பிள்ளைகளுக்கு
சொல்லி அனுப்புங்கள்.
அன்பு தடவிய கண்கள்
அரவணைக்கும் தோள்கள்
புன்னகை பூசிய முகம்
கண்ணீர் துடைக்கும் விரல்கள்
இவையே இன்றைக்கு
அனைவருக்குமான அவசிய தேவை
ஓடி போனவளுக்கு
துணையானது செல்பேசி....
ஆம்
பன்னிரண்டாம் வகுப்பு
கடைசி தேர்வன்று
காணாமல் போனாள் கல்பனா
காதல் வலையில் சிக்கி
காதல் வளர்க்க
தூதாய் அமைந்தது
செல்பேசி
படிப்பறிவில்லா
பெற்றோருக்கு
அவள் குறுஞ் செய்தியில்
நட்பு வளர்த்ததும்
வாட்ஸ் அப்பில்
காதல் வளர்த்ததும்
தெரிந்திருக்க நியாயம் இல்லை
பாட நூலின்
நடுவே வைத்து
முக நூலில்
மூழ்கியது
ஆசிரியர் அறியவில்லை
வகுப்பை கட் அடித்து
காதலனுடன் கைகோர்த்து
கடற்கறை மணலில் விளையாட
உடனுக்குடன் தகல் பெற்று
ஓயாமல் தகவல் கொடுத்து
தித்திப்பாய் சந்திப்பை
கச்சிதமாய் நிகழ்த்திவிட
பேருதவி புரிந்தது
செல்பேசி
கடிதம் தேவை இல்லை
நண்பர்கள் தூது இல்லை
செல்பேசி ஒன்றே போது
ஆற்று நீரோடு
அரித்து செல்லப்படும்
மணலாக அல்ல
வளைந்து கொடுத்தாலும்
இடம் பெயரா நாணலாய்
பாலில் கலந்த நீராய் அல்ல
தாமரை இலைமேல் தண்ணீராய்
சுயம் இழக்கச் செய்யாத
காதல் வேண்டும்
தாய்மொழி மறக்கச் செய்யும்
மயக்கம் வேண்டாம்
கவிதை கொண்டு தரும்
காதல் வேண்டும்
உலகையும் உறவையும்
மறக்கச் செய்யும்
போதை வேண்டாம்
வாழ்வின் அர்த்தம் கற்றுத்தரும்
காதல் வேண்டும்
என்னை மறந்து
சுற்றம் மறந்து
சொர்க்கம் காட்டும்
மாயம் வேண்டாம்
நீ நீயாக
நான் நானாக
நம்மை நாமே
உணரச் செய்யும்
எதார்த்தக் காதல் வேண்டும்
மார்கழி குளிரிலும்
பாலைவனச் சூடு காண்கிறேன்
உன் பிரிவில்
பெண்களை பூக்களாய் வளர்க்காதீர்கள்
இது நந்தவன தோட்டமல்ல
மனித மிருகங்களின் காடு
புடவை கட்ட மட்டும் கற்றுத்தராதீர்கள்
கண்களால் துகிலுரிக்கும் துரியோதனர்களின்
கண்களைக் கட்டவும் கற்றுத்தாருங்கள்
அடுப்பறை கூண்டிலிருந்து
பறக்க நினைக்கும்
சிறகுகள் பொசுக்கப்படலாம்
எத்தனை முறை தீயிலிட்டாலும்
உயிர் பெற்று வரும்
பீனிக்ஸ் பறவையாய் இரு
ஒரு பெண்ணாய் மட்டுமே
உன்னை தோற்கடிக்க நினைப்பவர்கள்
வென்றுவிடக்கூடாது
பெண்களை பூக்களாய் வளர்க்காதீர்கள்
இது நந்தவன தோட்டமல்ல
மனித மிருகங்களின் காடு
புடவை கட்ட மட்டும் கற்றுத்தராதீர்கள்
கண்களால் துகிலுரிக்கும் துரியோதனர்களின்
கண்களைக் கட்டவும் கற்றுத்தாருங்கள்
அடுப்பறை கூண்டிலிருந்து
பறக்க நினைக்கும்
சிறகுகள் பொசுக்கப்படலாம்
எத்தனை முறை தீயிலிட்டாலும்
உயிர் பெற்று வரும்
பீனிக்ஸ் பறவையாய் இரு
ஒரு பெண்ணாய் மட்டுமே
உன்னை தோற்கடிக்க நினைப்பவர்கள்
வென்றுவிடக்கூடாது